த பவர் பவுண்டேசன்

த பவர் பவுண்டேசன்

பெருந்தோட்டத்துறையில் தெழில் புரியும் தொழிலாளர்களின் மறுமலர்ச்சிக்கான மன்றம்.

சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட த பவர் பவுண்டேசன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமியத் தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகஅதன் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் குறித்து உழைத்து வருகின்றது.

1990 களில் இருந்து த பவர் பவுண்டேசன் அதன் குறிக்கோள்களை விரிவாக்கி பால்களின் சமத்துவத்தின் அடிப்படையில் தரமான தொடர்பாடலை மேம்படுத்தத் தீர்மானித்தது.பங்கேற்பு மிகு அனுகுமுறையுடன்,நிலைபேறான அபிவிருத்தியை எட்டுவதும்,பயன்பாடுகளை வலுப்படுத்துவதும் அதன் இறுதி இலக்காக இருக்கின்றது.

குறிக்கோள்கள்
* பேருந்தோட்டத் தொழிலாளர்களின் மற்றும் கிராமிய விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தலும்
*உள்ளுர்,தேசிய மற்றும் சர்வதேச முகவர்களின் உதவியைக் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் கிராமிய விவசாயிகளினதும் பொருளாதார,சமூக,சுற்றாடல் மற்றும் கலாசார தரங்களை முன்னேற்றுதல்.
*சமுதாய அபிவிருத்தியில் திறன் பயிற்சியினை வழங்குவதன் மூலம் கல்விச் சாதனைகளினை மேம்படுத்தி உறுதி செய்தல்.
*தீர்மானம் வகுக்கும் செயன்முறையிலும் அது தொடர்பான விடயங்களிலும் பெருந்தோட்ட மற்றும் கிராமியப் பெண்களின் முனைப்பாகப் பங்கு பற்றுவதற்காக பால் நிலை சமத்துவத்தினையும் தலைமைத்துவ திறமைகளையும் மேம்படுத்தல்.
*இன அல்லது சமய பேதங்கள் இன்றி எந்த சமுதாயமும் முகம் கொடுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்பனைக் காட்டுவதற்காக கூட்டுக் குரல்களை ஒன்று சேர்த்தல்.மற்றும் இந்த பரப்பினில் அவர்களின் அறிவினை அதிகரித்தல்
*இரண்டு துறைகளிலும் உள்ள நிர்க்கதியானோர்,மூத்தோர்,பின் தங்கிய சிறுவர்கள் ஆகியோரின் உரிய பராமரிப்பிற்காக பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தல்

கட்டமைப்பும் நிறுவனமும்

த பவர் பவுண்டேசன் நிறுவனமானது இலாபநோக்கின்றிச் செயற்படும்,சேவை நோக்கின் அடிப்படையிலான அபிவிருத்தி நிறுவனமாகும்.இது ஒரு பொது உறுப்பான்மையினையும்,பொதுக்கவுன்சிலையும்,நிறைவேற்றுச் சபையிலும் தவிசாளரால் யாப்பின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினடிப்படையில் நியமிக்கப்பட்ட மூன்று பேரையும் கொண்டுள்ளது.

நிறைவேற்றுக் கவுன்சிலில் தலைவர்,உப தலைவர்,செயலாளர் உதவிச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.

பணிப்பாளர் சபை

* திரு வேலாளயுதம் ருத்திர தீபன் - தலைவர்
* செல்வி.சோபனா ராஜேந்திரன் - செயலாளர்
* திருமதி.பி.விஜயகுமாரன் - பொருளாளர்

நாம் ஏன் அதிலே இருக்கின்றோம்

பெருந்தோட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அம் மக்கள் கஷ்டமான வாழ்க்கையினையும்,சமூகத்திலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.பிரிந்த வாழ்ந்ததினால் தங்கியிருத்தலானது அச் சமுதாயத்தில் உருவாகியது.அதை தங்கியிருத்தல் நோய்க்குறி என்றும் குறிப்பிடலாம்.முகாமைத்தும் செய்ததெல்லாம் அற்பமானவையே.அரசாங்கம் தலையிட்டு சாத்தியமான அளவிற்குச் செயற்பட்டது.அரசாங்க முகவர்களான மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் உண்மையாக செய்யப்படுவனவற்றிற்கும்,என்ன செய்யப்படவேணடும் என்பதற்கும் இடையில் எப்போதுமே ஓர் இடைவெளி - ஒரு வெற்றிடம் நிலவி வந்தது.அந்த இடத்தில் தான் NGO க்கள் தலையிட்டன.எவ்வாறாயினும்,ஒரு சந்தர்ப்பத்திலே பெருந்தோட்டத்துறை மக்களின் நலன்களுக்காக NGO க்கள் பணிபுரிவது அரிதாகவே இருந்தது.அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஒரு மாற்றத்துடன் நாம் செயற்பட ஆரம்பித்தோம்.எமது இலக்குகள் இத்தடைகளை தாண்டிப் பணிபுரிவதாகும்.

* பிரதான கருத்துக்குவிப்பு
* விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி
* சமூக அணிதிரட்டல்
* திறன் பயிற்சி மற்றும் அபிவிருத்தி
* பெண்களை வலுவூட்டல்
* சமூக மாற்றத்திற்காகக் கடன் வசதிகள்
* மனித உரிமைகளும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்
* முதியோர் பராமரிப்பு

அலுவலகம்
இல 24,பண்டாரநாயக்க மாவத்தை
பதுளை
தொலைபேசி 0552229598
மின்னஞ்சல் - powerfoundation@yahoo.com/kutty_deeps@yahoo.com
இணையத்தள முகவரி -www.powerfound.org