Recently updatedභාවිතකරන්නාගේ ඇතුල් වීමSyndicateEvents
|
ஹெல்ப்போ (HELP-O)HELP-O என்றால் என்ன? HELP-O என்பது மனிதர்களுக்கும் சுற்றாடலுக்குமிடையில் நற்பிணைப்பை ஏற்படுத்துகின்ற ஒரு அரச சார்பற்ற அமைப்பாகும்.இது இலங்கையின் காலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கொண்டு இயங்குகின்றது.மற்றும் இலங்கையிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் தன்னை பதிவு செய்துள்ளது.மனித உரிமைகள் மீறப்படுகின்றப் பொழுது அவற்றை பாதுகாக்கும் நோக்குடனும்,எதிர்கால நல்வாழ்விற்காக சுற்றாடலை பாதுகாக்கும் நோக்குடனும் 1993 ஆம் ஆண்டு HELP-O,உருவாக்கப்பட்டமது. மனிதர்களுக்கும் சுற்றாடலுக்கிடையில் நற்பிணைப்பை ஏற்படுத்தி,கிராமிய,நகர மக்கள் மத்தியில் இவற்றை மேம்படுத்துவதற்கான விடயங்களை மேற்கொண்டு அதன்மூலம் வறுமையை இல்லாதொழிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு,சமாதான சகவாழ்வுடன் மக்கள் வாழ்ந்து சுற்றாடலைப் பேணி நன்மை பெறுவதற்கான வழிவகைகளை செழித்தோங்கச் செய்வதாகும். பயனாளிகளுக்கு தரமான சேவைகள் கிடைப்பதன் நிமித்தம் அரச சார்பற்ற நிறுவனங்கள்,அரசாங்கத்துறையைச் சார்ந்தவர்கள்,சமூக மட்ட அமைப்புக்கள்,தொழில்வான்மை போன்ற துறையைச் சார்ந்த பணியாட்களும்,தொண்டர்களும் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கான வலையமைப்பு ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான விடயங்களை HELP-O இலகுபடுத்துகிறது. சமுதாயங்களுக்கிடையில் காணப்படும் பிளவுகளை,பிரச்சினைகளை இணங்கான்பதற்கும்,மற்றும் சமுதாயங்களை வலுவூட்டுவதன் நிமித்தம் பல ஆராய்ச்சிகளை HELP-O முன்னெடுத்துள்ளது. அமைப்பின் தொலைநோக்கு * இலங்கையில் சுற்றாடல் கூறுணுர்வுடைய பிரதேசங்களையும்,உயிர் பல்வகைமைகளையும் மேம்படுத்தும் நோக்குடன் முறையான வள முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது.(அமைப்பின் தொலைநோக்காகும்) * ஒருவரை மற்றொருவர் பரஸ்பரம் மதித்து,நேர்மையும் சமத்துவமுமிக்க சமுதாயமொன்றை தோற்றுவிக்க கூடிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உதவிகளை நல்கி,பங்கு பற்றுதல் அபிவிருத்தி உள்ளடங்களாக நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும் நோக்கில் இன முரண்பாடுகளை குறைத்தல். அமைப்பின் நோக்கம் *அபிவிருத்திப்பணிகளின் பொழுது எதிர்கொள்கின்ற சவால்களை நம்பிக்கையுடன் முகம் கொடுக்கக் கூடிய வகையில் உளள்ளர் மட்ட சமூக மைய குழுக்களை வலுப்படுத்தி,தம்மைப் பற்றிய விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றப் பொழுது அதில் தாமும் பங்குபற்றி நல்லாட்சிக்கு வழிசமைத்தல். * பங்கீடு பாட்டாளர்களுக்கிடையில் கருத்துக்கள்,தகவல்கள்,பொருட்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் பொருத்தமான சூழலை உருவாக்குதல். * அபிவிருத்தி சார்ந்த தகவல்களை பரப்புதல் * அனைவரும் இலங்கையர் என்ற முறையில் ஒன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளை தோற்றுவிக்கக்கூடிய விதத்தில்,அவர்களின் இனவேறுபாடுகளுக்கு அப்பால் சமத்துவமாக வாழக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்ககூடிய,அதிகப்படியான சமூக பங்கு பற்றுதல்,மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை மேம்படுத்தக்கூடிய சிறிய குழுக்கள்,இளைஞர் கழகங்கள்,கூட்டுறவு அமைப்புக்கள் போன்றவற்றிற்கு உதவிகளை நல்குதல். HELP-O எவ்வாறு செயற்படுகிறது? காலி நகர எல்லைக்குள்ளும் அதற்கு வெளியேயும் வாழுகின்ற மக்களது நலன்களை மேம்படுத்தும் நோக்கில் சுனாமிக்கு முன்பும் அதற்கு பின்பும் பல நிகழ்ச்சித்திட்டங்களை HELP-O நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறுவகையான உள்ளுர்,சர்வதேசிய அமைப்புக்கள் தமது அனுசரணைகளை வழங்கியுள்ளன.இக்கருத்திட்டங்களை அமுல்படுத்துவதன் நிமித்தம் பின்வரும் அமைப்புகளுடன் HELP-O பணியாற்றுகிறது. * சிடி நெற் சமுதாயத்திற்கு சேவை செய்யும் நோக்கில் 40 ற்கு மேற்பட்ட ஊழியர்களும் 500 ற்கு மேற்பட்ட தொண்டர்களும் HELP-O வினால் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். சமுதாய பங்கு பற்றுதலில் அதிக அக்கறையுடைவர்கள் என்ற முறையில் எப்போதும் எமது கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது சமுதாயத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். உறுப்பினர் என்ற முறையில் HELP-O பின்வரும் உள்ளுர்,சர்வதேச அமைப்புகளுடன் உரிப்புரிமையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். * CITY NET,ஜப்பான் இலங்கை உறுப்புரிமை * வீடமைப்பு உரிமைகளுக்கான ஆசிய கூட்டமைப்பு,இலங்கை உறுப்பினர் * ANPAS இத்தாலி இலங்கை உறுப்பினர் * ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்,கொழும்பு * SEVENATHA- நகர வள நிலையம் கொழும்பு * Green Movement இலங்கை அமுல்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் * காலி கரகபிட்டிய போதனாவைத்தியசாலையில் உயிர்வாய்வு கருத்திட்டம் நடைமுறைப்படுத்தல். * சிறைக்கைதிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் * காலி துப்புரவாக்குதல் * சமாதான விழிப்பூட்டல்கள்,சமாதான சுற்றுவட்ட நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கல் * மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனைகள் * எதிர்வுகூறக்கூடிய சமாதான நிகழ்ச்சித்திட்டங்கள் - வானொலியில் இடம்பெற்றவை * சுனாமியின் பின்பு ஏற்பட்ட தின்மக்கழிவுகளையும்,ஓட்டை உடைசல்களையும் அகற்றுதல். * சமூகங்களை மீளக்கட்டமைக்கும் நோக்குடன் சமுதாய நிலையங்களை உருவாக்கல் * வலது குறைந்தவர்கள் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகளுக்கு பொருட்களை வழங்கல். * மீன் வியாபாரிகளுக்கு துவிச்சக்கரவண்டி,அதனுடன் தொடர்புடைய சில உபகரணங்கள்,பெட்டி ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியமை. * மீனவர்களுக்கு தோனி,வலை போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியமை நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்திட்டங்கள் * சமூகங்களுக்கு மத்தியில் சேமிப்பு குழுக்களை உருவாக்கல் சுற்றாடலைப் பாதுகாத்தல் ஸ்திரமான தின்மக் கழிவு முகாமைத்துவம் காலி மாநகர சபையின் கீழ் கரகாபிட்டிய வைத்தியசாலையில் "உயிர்வாயு"நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தல் கரகாபிட்டிய வைத்திய எல்வையினுள் முறையற்ற விதத்தில் மிகமோசமான நிலையில் குப்பைக் கூழங்கள் காணப்பட்டன.இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் என அஞ்சி வைத்தியர்கள் கூட இங்கு பணியாற்ற மறுத்தனர். இக்கருத்திட்டத்தின் பயனாக 'உயர்வு வாய்வு கூடத்தினால்'கிடைக்கக்கூடிய நன்மைகளை கரகாபிட்டிய வைத்தியசாலை இப்போது பெற்றுக்கொண்டிருக்கிறது. * உயிர்வாயுவை பெற்றுக்கொள்வதற்காக சேதன பதார்த்தங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் விளைவாக கரகாபிட்டிய வைத்தியசாலையில் குப்பைக்கூழங்கள் தொடர்பான பிரச்சினை குறைந்துள்ளது.மேலும் உயிர் வாயுவை பயன்படுத்தவதன் விளைவாக சமையலுக்கும் பயன்படுத்தப்பட்ட (LPG-gas) ஒரு சிலின்டரை சேமிக்க முடிகிறது. காலி மாநகர சபை குப்பைகள் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உதவி செய்யும் நோக்குடன் மேலும் இரண்டு உயிர் வாயு கூடங்களை அமைக்கவுள்ளோம். குப்பைகளை தரம்பிரித்தல் தொடர்பாக வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டி. புனர்வாழ்வு கருத்திட்டங்கள் புனர்வாழ்வு மற்றும் நிவாரணத்திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர் நகரை சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியமானதாகும்.மக்களது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காகவும்,சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவும் நாம் சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை உருவாக்கியுள்யுள்ளோம்.இதன் விளைவாக பலர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,ஏனையவர்களுக்கும் வருமாணத்தை ஈட்டுவதற்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.இது "வேலைக்கு ஊதியம்"கருத்திட்டமாகும். இக்கருத்திட்டத்தின் கீழ் 16000 பேர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் காலியில் பணியாற்றும் ஊழியர்களது எண்ணிக்கை - 10000 மக்கள் தமது புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு இவ்வகையான செயலாற்றுகைகள் அவர்களுக்கு பெரிதும் துணைபுரிந்தன.மேலும் சுத்தம் தொடர்பாக பணியாற்றுவதற்கு ஏனைய அமைப்புகளுக்கும் துணைபுரிந்தது. ஹெல்ப்போ அமைப்பு ( HELP-O) இலக்கம் 285, தங்கெதர மாவத்தை,காலி தொலைபேசி 94 91 5450027 தொலைநகல் 94 91 4380121 மின்னஞ்சல் - helpogn@wow.lk இணையத்தளம் - http://www.help-o.com By cpa at 2006-09-19 03:43 | login to post comments
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||